தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு!


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த தெரிவித்தார்.


பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த மேலும் தெரிவிக்கையில், 


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை நாளை வெள்ளிக்கிழமை (04) முதல் 30 ஆம் திகதி நள்ளிரவு 12:00 வரை இணையவழி (online) ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்படாது.


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு அரச பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்கள் மாத்திரமே தோற்ற முடியும்.


பரீட்சைக்கு தோற்ற ஆயத்தமாக உள்ள மாணவர்கள் 11 வயதுக்கும் குறைந்தவர்களாக காணப்பட வேண்டும்.


மேலதிக தகவல்களுக்கும் விண்ணப்ப வழிமுறைகளுக்கும் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியை பிரவேசிக்கலாம்.


விசேட தேவையுடைய மாணவர்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான வழிமுறைகளும் குறித்த இணையத்தள முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தொலைபேசி எண்கள் - 011-2784537, 011-2786616, 011-2784208 011-2786200, 011-2784201

மின்னஞ்சல் முகவரி - http://gr5schexam@gmail.com

அவசர எண் - 1911

தொலைநகல் எண் - 011-2784422


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.