விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை வெலிகம ஹோட்டலொன்றுக்கு அருகில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர் உயிரிழந்த மற்றும் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.