முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவரை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் இன்று (21) உத்தரவிட்டார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்ததை அடுத்து, தேசபந்து தென்னக்கோன் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.