சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள ரத்வத்தவின் வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பிரதிவாதிகளுக்கு ரூ. 1 மில்லியன் தீர்வுத் தொகை வழங்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 2024 இல், குடிபோதையில் வாகனம் ஓட்டி சாலை விபத்தை ஏற்படுத்தியதற்காக லோகன் ரத்வத்த கொள்ளுபிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓட்டிச் சென்ற லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார், கொள்ளுப்பிட்டி சந்திப்பில் ஒரு காருடன் மோதியது.
விபத்துக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் விபத்துக்குள்ளான மற்றைய வாகனத்தில் இருந்த ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது உதவியாளரை வார்த்தைகளால் திட்டி மிரட்டிஇருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)