சம்பவம் குறித்து ஏழு பேர் கொண்ட குழு விசாரித்து வருவதாக கூறியுள்ள அமைச்சர் அருண ஜெயசேகர, தேவைப்பட்டால், வெளிநாட்டு ஆய்வுக் குழுக்கள் வரவழைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாரியபொலவின் மினுவங்கேட் பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (21) அன்று இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K-8 வகை ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த இரண்டு விமானப்படை வீரர்கள் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.