எரிபொருள் விநியோகஸ்தர்கள் வழக்கம்போல் தங்கள் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவும், தாமதமின்றி எரிபொருள் ஆர்டர்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சனநாயக்க தெரிவித்தார்.
இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவருடனான சந்திப்பு நாளை (04) நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு அறிவிக்கும்.
"எங்கள் முடிவு பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். பேர்ச்சுவார்தை இல்லாததால் பிரச்சினை அதிகரித்தது. இருப்பினும், இந்த விஷயத்தை ஒருதலைப்பட்சமாக தீர்க்க முடியாது, மேலும் பேச்சுவார்த்தை அவசியம் என்பதை அதிகாரிகள் இப்போது புரிந்துகொள்கிறார்கள். CPC தலைவர் நாளை காலை 9:00 மணிக்கு ஒரு விவாதத்திற்கு எங்களை அழைத்துள்ளார். எனவே, அனைத்து விநியோகஸ்தர்களும் உடனடியாக செயல்பாடுகளை மீண்டும் தொடங்கி முன்பு போலவே எரிபொருள் விநியோகத்தைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று சனநாயக்க கூறினார். (யாழ் நியூஸ்)