அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
எமது நாட்டில் சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் தொழுகை நேரங்கள், முன்னைய ஆலிம்களால் உருவாக்கப்பட்டு, பின்னர் அல்-ஆலிம் அப்துல் ஸமத் ரஹிமஹுல்லாஹ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழுகை நேர அட்டவணையின் அடிப்படையில், தற்போதுவரை அமுலில் இருந்து வருகின்றது.
இந்நிலையில், புவியியல் மாற்றங்கள் பாதைகள் விஸ்தரிப்பு மற்றும் உயர் மாடிக் கட்டிடங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சில நாட்களில் மக்ரிப் தொழுகையின் அதான் சொல்லப்படும் நேரத்தில் சூரியன் தென்படுவதை அவதானிக்க முடிகின்றது.
எனவே, குறித்த விடயத்தை மக்களுக்கு அறிவூட்டுவதற்காக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஹஸனிய்யா அரபுக் கல்லூரியும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.
ஆகவே, கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இருப்பவர்கள் மக்ரிப் தொழுகையின் அதானை கலண்டரிலுள்ள நேர சூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துடன் ஒரு நிமிடத்தைக் கூட்டி அந்நேரத்தில் அதான் சொல்லி நோன்பு திறக்கமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
அஷ்-ஷைக் எம்.எச்.எம் புர்ஹான்
செயலாளர், பிறைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை