பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவை பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து, புதுக்கடை நீதவான நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருந்த தலைமை ஜெயிலர், கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சஞ்சீவா கொலை தொடர்பாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட தலைமை சிறைச்சாலை அதிகாரி கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு, கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் இரண்டாவது முறையாக வாக்குமூலம் பெற்ற பின்னர் கைது செய்யப்பட்டார்.