இம்முறை ஹஜ் பயணத்தில் நடைபெறவுள்ள மோசடி! ஹாஜிகளே அவதானம்! ஹஜ் கமிட்டியின் கவனத்திற்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை ஹஜ் பயணத்தில் நடைபெறவுள்ள மோசடி! ஹாஜிகளே அவதானம்! ஹஜ் கமிட்டியின் கவனத்திற்கு!

இம்முறை 3500 ஹஜ் வீஸாக்கள் இலங்கைக்கு கிடைத்த நிலையில், இவை 92 ஹஜ் முகவர்களிடத்தில் பகிர்ந்தழிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை ஹஜ்ஜுக்கான கட்டணமாக சுமார் 23 லட்சங்கள் முதல் கட்டணம் அறவிடப்படுவதனால், ஹஜ் செய்யவிருந்த பல சாதாரணமான நிலையில் உள்ள மக்கள் பின்வாங்கியுள்ளனர். இதனால் 3500 ஹாஜிகளை பூர்த்தி செய்ய முடியாதுள்ளதனாலும் மீண்டும் ஹஜ் தொடர்பான பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் ஹஜ் செய்ய விரும்பும் ஹாஜிகள் இன்றும் கூட 5000/= ரூபா பதிவுக்கட்டனமாக செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இது ஒருபுறமிருக்க, இம்முறை ஹஜ் கூடாரம் பெற்றுக்கொள்வதில் இலங்கை C பிரிவையே பதிவு செய்துள்ளது. முன்னைய காலங்களில் A , B போன்ற பகுதிகளை பெற்றுக்கொண்ட போதிலும், இம்முறை C பகுதி மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளதால், ஒரு ஹாஜிக்கான செலவு இதிலும் குறைவாகவே கணப்படும். 

இவ்வாறான ஒரு நிலையிலும் கூட சில ஹஜ் முகவர்கள், ஹாஜிகளை ஏமாற்றி கொள்ளை அடிக்க முயற்சிகள் செய்து வருவதாக சில தகவல்களை அறியக்கிடைக்கின்றது.

அதாவது, ஒரு சில ஹஜ் முகவர்கள், (Budget Flights) குறைந்த செலவில் உள்ள விமானங்களில் ஆசன பதிவுகளை செய்து, அதில் ஹஜிகளை அழைத்துச் செல்ல தயாராகி வருவதாக தவல்கள் கிடைத்துள்ளது. 

(Budget Flights) குறைந்த கட்ண விமானம் என்பது ஒரு சாப்பாடு, ஒரு தண்ணீர் போத்தலுடன் மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவையாகும். இவ்வாறான சில விமானங்களில் ஒரு (bun) சிற்றுண்டி மட்டுமே வழங்கப்படுவதும் உண்டு. இன்னும் சில குறுகிய பயண விமானங்களில் தண்ணீர் போத்தல் ஒன்று மட்டுமே வழங்கப்படும். இதற்கு மேல் ஒரு தண்ணீர் போத்தல், அல்லது ஒரு தேநீர் தேவைப்பட்டால் கூட ஹாஜிகள் டாலரில் பணம் செலுத்த வேண்டும். இதுவே (Budget Flights) குறைந்த சேவை விமாணத்தின் நடைமுறையாகும்.

ஹஜ் பணம் என்பது (transit) ரான்ஸிட் விமானம் மாறிச் செல்லும் பயணமாக உள்ளதால், சுமார் 10 முதல் 12 மணித்தியால பயணமாகும். இவ்வாறான தூர பயணங்கள் இவ்வாறான ரான்ஸிட் (Budget Flight) குறைந்த சேவை விமாணங்களில் பயணிப்பது மிகவும் கடினமானதாகும்.

(Budget Flights) குறைந்த சேவை விமான‌த்திற்கும் ( Full service flight ) முழுச் சேவை மக்கா பயண விமானத்திற்கும் இடையில் உள்ள கட்டண வித்தியாசம், சுமார் 75 ஆயிரம் முதல் 1 லற்சம் வரை குறைவானதாகும் என, தகவல் வழங்கி உதவிய விமான முகவர் ஒருவர் தெரிவித்தார்.

ஹாஜிகளுக்கு எந்த விமானங்களை பதிவு செய்துள்ளோம் என்ற விபரங்களை தற்போதே
அறிவிக்காமல், நேரம் நெருங்கும் போது விமானங்கள் இல்லை என தெரிவித்து, அதனால் இதில் ஆசனப்பதிவுகளை செய்துள்ளோம் எனவும் மக்களை சுவரில் சாத்தி, இதுவிடயத்தில் அனுபவமில்லாத அப்பாவி பாமர ஹாஜிகளை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது இவர்களது திட்டமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் இதை உறுதி செய்துகொள்ள ஒரு நெருங்கிய ஹஜ் முகவரை தொடர்பு கொண்டபோது, அவர் குறிப்பிட்டதாவது, இம்முறை ஹஜ் செலவு பெரிய முதலீட்டுடன் செய்ய வேண்டியுள்ளது. என்றாலும் அதற்கேற்றவாறு கட்டண அதிகரிப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சில முகவர்கள் விமான விடயத்தில் விளையாட முற்படுவது ஒரு கீழ்தரமான விடயமாகும் எனவும் தெரிவித்தார்.

எனவே இம்முறை ஹஜ் பயணத்திற்கான கட்டணமும் அதிகரித்த நிலையிலும், கூடாரத்திற்கான கட்டணமும் குறைந்த நிலையிலும் எந்த ஒரு ஹாஜியும் ( budget Flight ) குறைந்த கட்ண விமானத்தில் கஷ்டப்பட்டு
பயணிக்க வேண்டியதில்லை. இது ஒரு மிகவும் அசாதாரணமான பகல் கொள்ளையாகும்.

எனவே இம்முறை ஹஜ் சொல்ல இருக்கும் ஹஜ் பயணிகள் தமது பயண முகவர்களிடம் தமது ஹஜ் பயணம், முழுச் சேவை விமானம் ( Full service Flight ) என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். 

( Budget Flights ) குறைந்த சேவைக்காகவே சில விமான நிறுவனங்கள் உள்ளன. எனவே உங்கள் பயணத்திற்கான விமானம் எது என்பதை முன்கூட்டியே தீர விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

ஹஜ் பயணம் என்பது அநேகமாக, அதிகமானவர்கள் நீண்ட காலமாக பணத்தை சேமித்து, தங்களது பல நினைவுகளை கனவுகளாக ஆக்கி, பல ஆசைகளை அலாஹ்வுக்கா நிராசையாக மாற்றி, பெரிய தியாகத்தின் மத்தியில் நிறைவேற்றும் ஒரு கடமையாகும். எனவே இதில் யாரும் ஏமாறவோ ஏமாற்றப்படவோ கூடாது.

எனவே இம்முறை ஹஜ் செல்லவிருக்கும் ஹாஜிகள் இது விடயத்தில் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் இருந்து கொள்ளவேண்டும்.

மக்கள் கொடுக்கும் பணத்திற்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுப்பது ஹஜ் கமிட்டியின் பொறுப்பாகும். எனவே இது சம்பந்தமாக ஹஜ் கமிட்டி கூடிய கவனம் செலுத்தி, மக்களின் பாதுகா‌ப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.