முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வசிக்கும் வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது.
அவரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீசார் அங்கு சோதனையிட்ட போது அவர் அந்த வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலேயே நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவரை கைது செய்வதற்காக பொலிஸார் வீட்டிற்கு சென்ற போது அவர் தலைமறைவாகி இருந்ததாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் இன்று அல்லது நாளை அவர் சரணடைவார் என நம்புகின்றேன் என்றார்.