ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 1.6 கோடி ரூபா செலவளித்துள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 1.6 கோடி ரூபா செலவளித்துள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சு!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர்  லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. 


அதற்காக அவர்கள் இவர்கள் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் இந்த நிதி குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டுமென சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வெளிவிவகாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.


பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளுக்காக நாட்டு மக்களின் வரிப்பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய அமைச்சுக்களில் காணப்படும் ஊழல் மோசடி மற்றும் நிதி வீண்விரயம்   வெளிவிவகாரத்துறை அமைச்சினையும் விட்டுவைக்கவில்லை.  


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  22 மற்றும் 23 ஆம் திகதிகளில் லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் தொடர்பிலான ஆவணங்களை  சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.


இந்த தனிப்பட்ட விஜயத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு செலவழித்துள்ளது. இந்த தனிப்பட்ட விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார், சேனாநாயக்க திசாநாயக்க, சந்திரா  பெரேரா உட்பட 10 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட லண்டன் பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. 


ஆரம்பத்தில் தனிப்பட்ட  பயணம் என்று குறிப்பிடப்பட்ட நிலையில்  பயணத்தின் பின்னர் அரசமுறை பயணம் என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பயணத்துக்கான செலவுகள் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வங்குரோத்து நிலைக்கு மத்தியில் மக்களின் நிதியை இவ்வாறு வீண்விரயமாக்கியுள்ளார்கள். உண்மையில் வெட்கப்பட வேண்டும். 


வெளிவிவகாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றார்.


வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளுக்காக நாட்டு மக்களின் வரிப்பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 


ஏனைய அமைச்சுக்களில் காணப்படும் ஊழல் மோசடி மற்றும்  நிதி வீண்விரயம்   வெளிவிவகாரத்துறை அமைச்சினையும் விட்டுவைக்கவில்லை.  


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  22 மற்றும் 23 ஆம் திகதிகளில்  லன்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் தொடர்பிலான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.


இந்த தனிப்பட்ட விஜயத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு செலவழித்துள்ளது. இந்த தனிப்பட்ட விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார், சேனாநாயக்க திசாநாயக்க, சந்ரா  பெரேரா உட்பட 10 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட லன்டன் பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது.


ஆரம்பத்தில் தனிப்பட்ட பயணம் என்று குறிப்பிடப்பட்ட நிலையில்  பயணத்தின் பின்னர் அரசமுறை பயணம் என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பயணத்துக்கான செலவுகள் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.


நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வங்குரோத்து நிலைக்கு மத்தியில் மக்களின் நிதியை இவ்வாறு வீண்விரயமாக்கியுள்ளார்கள். 


உண்மையில் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.