காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கணவன் உயிரிழந்துள்ள நிலையில் மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தலைமறைவாகியிருக்கும் சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் காலி பொலிஸ் நிலையத்தின் 071 - 859 1452 அல்லது 091 - 223 3217 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபரங்கள் பின்வருமாறு,
1.
பெயர்: எதிரிவீர விஜேசுந்தர படபெதிகே நில்சுரங்க
NIC: 861201535v
முகவரி: இல 541,வீரவில
2.
பெயர்: கொத்தி உபேந்து புஸ்ப குமார
NIC: 800150817v
முகவரி: இல 14, நயாகொட, இரத்கம
3.
பெயர்: மெட்டிவல ஹசுன் பிரசாத் பத்க குமார
NIC: 930373443v
முகவரி: இல 456/ பீ , ரணபனாதெனிய, இரத்கம