ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக மூத்த ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மூத்த ஊடகவியலாளரான அனுருத்த லொக்குஹபுஆராச்சி, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கீழ் சர்வதேச ஊடகங்கள் மற்றும் மூலோபாய தொடர்புகளுக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவிடமிருந்து இரு அதிகாரிகளும் தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மூத்த பத்திரிகையாளரான சந்தன சூரியபண்டார, இலங்கையின் ஊடகத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
புகைப்பட இதழியல் துறையில் புகழ்பெற்ற அனுருத்த லொகுஹாபுராச்சி, சர்வதேச ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக பணியாற்றியுள்ளார்.
இலங்கையின் அச்சு ஊடகத் துறையில் டிஜிட்டல் புகைப்படக் கலையை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. லொகுஹாபுராச்சி புகைப்படம் எடுத்தல் மற்றும் டிஜிட்டல் இமேஜிங்கில் கௌரவப் பட்டத்தையும் பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.