மேன்முறையீட்டு நீதிமன்றில் தற்போது கடமையாற்றும் மிக மூத்த நீதிபதியான மொஹமட் லஃபார் தாஹிர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, நீதியரசர் மொஹமட் லஃபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் பந்துல கருணாரத்னவின் ஓய்வுகால விடுமுறையை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.