பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (19) பயணித்த பொடிமெனிக்கே ரயிலில் பயணித்த ரஷ்ய வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவர் பலியானார்.
பதுளை மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் நடைமேடையில் தொங்கி செல்ஃபி எடுக்க முயன்றபோது, பாறையில் மோதி ரயிலில் இருந்து விழுந்தார்.
படுகாயமடைந்த அவர், பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
ரஷ்ய சுற்றுலாப் பயணியான 53 வயதான பெர்மினோவா ஓல்கா என்ற பெண்ணே இவ்வாறு இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு சுற்றுலா பயணம் ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் வந்த அந்தப் பெண், இன்று காலை பதுளை ரயில் நிலையத்திற்கு வந்து, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பொடிமெனிக்கே ரயிலில் ஏறி எல்ல நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.