இன்று (28) நள்ளிரவு முதல், எரிபொருள் விநியோகஸ்தர்கள் பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடித் தொகையை ரத்து செய்து, நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சூத்திரத்தின் படி பணம் செலுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையடுத்து, இன்று (28) நள்ளிரவு முதல், எரிபொருள் விநியோகஸ்தர்கள் பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக விநியோகஸ்தர்கள் சங்கம் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தது.