கனேமுல்ல சஞ்சீவ யார்? ஏன் நீதிமன்றத்துக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கனேமுல்ல சஞ்சீவ யார்? ஏன் நீதிமன்றத்துக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார்?


கனமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சினிமா பாணியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான பல தகவல்களை நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் இந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பின் பாதாள உலக கோட் பாதராக தன்னை நிலைநாட்டிக்கொள்ள முயட்சித்தவர். 30 க்கும் அதிகமான கொலை சம்பவங்களில் கூலி கொலைகாரராக இவர் செயட்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன.

திட்டமிட்ட ஒரு கும்பலோடு சேர்ந்து தனியார் வங்கியொன்றில் 7 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் கைதானவர்.

சிறைக்கு சென்ற சஞ்சீவ அப்போதைய கொழும்பின் பாதாள கோட் பாதர்களான "பிளூமெண்டல் சங்க, ஆர்மி சம்பத்" ஆகியோரது அடியாளாக வெளியில் வருகின்றார்.

அதன் பின்னர் கட்டம் கட்டமாக கொழும்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சஞ்சீவ முயட்சிகளை செய்தாலும் அதற்கு தடையாக தெமட்டகொட சமிந்த (இவரும் பாதாள உலக உறுப்பினர்) தடையாக இருக்கிறார்.

எனவே சமிந்தவை கொலை செய்ய சஞ்சீவ முயட்சி செய்தார். முதல் சம்பவமாக தெமட்டகொட இறைச்சிக்கடைக்கு முன்னாள் வாகனத்தில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார். ஆனால் சமிந்தவின் தம்பி ருவன் சஞ்சீவவுக்கு முன்னர் வந்தார் எதிரில் இருந்து சஞ்சீவ வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதனால் இவர்களின் அடியாள் ஒருவர் உயிரிழந்தாலும் தெமட்டகொட சமிந்த உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் பின்னர் சஞ்சீவ உற்பட்ட குழு போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு துபாய் சென்றனர். ஆனால் குறுகிய நாட்களுக்கு பின்னர் மீண்டும் சஞ்சீவ இலங்கை வந்தார். மீண்டும் சமிந்தவை கொலை செய்ய முயன்றார்.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் சமிந்த ஆஜராகி மீண்டும் சிறைக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியை தெமட்டகொட பகுதியில் பாதை நடுவில் இடைமறித்து பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் இந்த சஞ்சீவ உற்பட அவரது குழு.

அங்கேயும் சமிந்த உயிர்தப்பிய நிலையில் குற்றவாளிகளை தேடி போலீசார் வலைவீச ஆரம்பித்தனர். குறுகிய காலத்துக்குள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதில் இந்த சஞ்சீவவும் இருந்தார்.

மீண்டும் சிறைக்குச் சென்ற சஞ்சீவ கொழும்பை கைவிட்டுவிட்டு கம்பஹா மாவட்ட பாதாள செயட்பாடுகளை தனக்குக் கீழ் கொண்டுவர முயட்சி செய்தார். அங்கே அவருக்கு தடையாக இருந்தவர்தான் ஒஸ்மான் என்பவர். 2018 ஏப்ரல் மாதம் ஒஸ்மான் மீதும் துப்பாக்கிச்சூட்டு நடத்தினார் சஞ்சீவ. அதற்காக தனது அடியாட்களான "அஜா மற்றும் சூளா" என்பவரையே பாவித்தார்.

இதுவே சஞ்சீவவின் சாதாரணமான பின்னணி. இவருடைய திட்டங்களின் அடிப்படையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலிட முடியாதவை. 30 க்கும் அதிகம் என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது.

போதைப்பொருள் வியாபாரம், கப்பம் பெறுதல், கொலைகள் என்பவற்றை பகிரங்கமாக செய்த இவர் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.

இன்னுமொரு கொலை வழக்கு தொடர்பில் பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் இலக்கம் 05 நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு சாட்சியம் வழங்கிக்கொண்டிருந்தார்.

குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டிருந்த நிலையில்தான் சட்டத்தரணி வேடம் அணிந்த துப்பாக்கி தாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குற்றவாளிக்கூண்டுக்கு மிக அருகில் சென்றுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி தாரி அருகில் சென்றாலும் ஒருவேளை சஞ்சீவவின் சட்டத்தரணியாக இருக்கலாம் என்றே அநேகர் நம்பியுள்ளனர்.

எவ்வராயினும் கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பார்கள். இங்கே அது நிறைவேறியுள்ளது. அதுதான் யதார்த்தம்.

-முகநூல் பதிவு

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.