உயர் பாதுகாப்பு கொண்ட ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்கு வரும் காட்சிகள் சிசிரிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர், குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவை புத்தகத்திற்குள் மறைத்து வைத்து ஆயுதத்தை கடத்தியதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபரைக் கைது செய்ய தீவிர பொலிஸ் நடவடிக்கை நடந்து வருகிறது. விசாரணைகள் தொடர்கின்றன.
🚨 Police have identified the shooter from CCTV footage—he was seen walking inside the high-security Hulftsdorp Court Complex before opening fire. A massive manhunt is underway to capture him pic.twitter.com/1G94Cdcpry
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) February 19, 2025