ஜா-எல, மோகன்வத்தவில் நேற்று (20) இரவு கவடத்தாவைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவரின் மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காணவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.