இலங்கையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலை இன்று (13) மீண்டும் உயர்வடைந்துள்ளது.
அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் தங்கத்தின் விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 213,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், 18 கரட் தங்கம் 174,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,000 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,625 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.