கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி கந்தானையில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கந்தானை பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சாலையொன்றில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591595 அல்லது 071-8591594 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)