கண்டி, கம்பளை, தவுலகல பிரதேசத்தில் மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட மேலும் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 19 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் தவுலகல பொலிஸ் பிரிவின் ஹபுகஹயட பகுதியில் இந்த கடத்தல் நடந்தபோது, அந்த இடத்தில் பயணித்ததாக கூறப்படும் கம்பளை பொலிஸில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் அது தொடர்பில் தவுலகல பொலிஸின் செயற்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளார்.
எனினும் அந்த அறிவிப்பு குறித்து தவுலகல பொலிஸார் உரிய முறையில் செயற்படவில்லை என குற்றச்சாட்டில் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.