காலி அங்குலுகஹ பகுதியில் இன்று (26) காலை 8.30 மணியளவில் மூன்று பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் மோதியது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த பயணிகளின் நிலை குறித்த மேலதிக தகவல்கள் காத்திருக்கின்றன.