பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வத்தேகம மீன் வியாபாரியின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை மாத்தளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (13) கைது செய்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் மாத்தளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
மாத்தறை, டிக்வெல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்களிடமிருந்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு கூர்மையான ஆயுதங்களும், ரூ.370,000 பணமும் கைப்பற்றப்பட்டன.
வத்தேகம நகரில் இரண்டு மீன் வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஜனவரி 03 ஆம் திகதி அவரது வீட்டின் முன் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது. கொல்லப்பட்ட நபர் வசந்த சஞ்சீவ என்ற 39 வயதுடைய திருமணமாகாத நபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.