பாடத்திட்டங்கள் மற்றும் பரீட்சை முறையில் வரப்போகும் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடத்திட்டங்கள் மற்றும் பரீட்சை முறையில் வரப்போகும் மாற்றம்!


2026 ஆம் ஆண்டு முதல் பாடத்திட்டங்கள், பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 


முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 


தற்போதுள்ள கல்வி முறையை மாணவர் சமூகத்திற்கு மிகவும் பொருத்தமான வகையில் மாற்றுவதன் மூலம் கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். 


அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களின் உள்ளடக்கத்தை மிகவும் பொருத்தமானதாக மாற்ற தாம் விரும்புவதாகவும், அந்தப் பாடங்களை ஒருபோதும் நீக்க எதிர்பார்க்கவில்லை என்றும் பிரதமர் கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.