சர்வதேச மொபைல் சாதன அடையாள (IMEI) பதிவு தேவைப்படுவது உள்ளடங்கலாக எந்தவொரு றேடியோ அலைவரிசையை வெளிப்படுத்தும் சாதனங்களும் இன்று முதல் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (TRCSL) பதிவு செய்யப்படாமல் விட்டால் இயங்க அனுமதிக்கப்படாதென TRCSLலின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் தம்முடன் எடுத்து வரும் சாதனங்கள் இதனால் பாதிக்கப்படாது.
இதேவேளை இன்றைக்கு முன்னர் தொலைத்தொடர்பு இயக்குநர் வலையமைப்புகளில் இணைக்கப்பட்ட IMEI பதிவு தேவைப்படும் றேடியோ அலைவரிசை சாதனங்களுக்கு இந்நடைமுறை பொருந்தாதென்பது குறிப்பிடத்தக்கது.
IMEI ஆனது ஓவ்வொரு அலைபேசியிலும் காணப்படும் 15 இலக்க எண்ணானது பொதுவாக மின்கலம் அகற்றப்பட்டதும் காணப்படும். இல்லாவிடில் *#06#ஐ அழுத்தும்போதும் இதைப் பெறலாம்.
TRCSLலில் IMEI பதிவு செய்யப்பட்டுள்ளதாக எனப் பார்ப்பதற்கு IMEI இடைவெளி 15 இலக்க எண்னை 1909 என்ற எண்ணுக்கு SMS செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.