வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர், அதன் மெகசின் மற்றும் ஐந்து தோட்டாக்களுடன், மொரகஹேன பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (25) கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகம்மன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ஹோமாகம, மாகம்மன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கஹதுடுவ மற்றும் மொரகஹஹேன பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. (யாழ் நியூஸ்)