பாராளுமன்ற உள்துறைக் குழு எடுத்த முடிவின்படி, எம்.பி.க்களின் தினசரி உணவுக் கட்டணம் 450 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) கூடிய பாராளுமன்ற உள்துறை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திருத்தத்தின் மூலம் எம்.பி.யின் காலை உணவுக்கான கொடுப்பனவு ரூ.600 ஆகவும், மதிய உணவு ரூ.1,300 ஆகவும், பிற்பகல் தேநீர் ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தத்திற்கு முன், காலை உணவு ரூ.100, மதிய உணவு ரூ.300, மதியம் தேநீர் ரூ.50ஆக இருந்தது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் சிற்றுண்டிச்சாலையில் விருந்தினரை உபசரிப்பதற்கு மேலதிகமாக அறவிடப்படும் 275 ரூபாவை அதே போன்று பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.