முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அவரது மனைவி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அவரது மனைவி கைது!

2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அவரது மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பிங்கிரிய மற்றும் நாரம்மல பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாகக் கூறி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த நிதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த நிதி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகநபர்கள் நாளை (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.    

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.