எம்பிக்களுக்கு விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எம்பிக்களுக்கு விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்!


அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


"அனைத்து எம்.பி.க்களும் புதிய வாகனத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதுவரை எம்.பி.க்களுக்கு வாகனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு அமைச்சருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினருக்கோ தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாகனம் தேவை - அதனை நாங்கள் மறுக்க முடியாது," என வடமேல் மாகாண இயந்திரவியல் மற்றும் உபகரண அதிகார சபையின் குருநாகல் கிளைக்கு ஆய்வுச் சுற்றுப்பயணம் செய்த போது ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், "எம்.பி.க்களுக்கு வாகனங்கள் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது, ஆனால் எந்த ரக வாகனங்கள் என முடிவு செய்யப்படவில்லை என்றாலும், அவை நிச்சயமாக புதியதாக இருக்கும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."


இயந்திர மற்றும் உபகரண அதிகார சபையின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்த திஸாநாயக்க, "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், சேதமடைந்த வாகனங்களை இந்த இடத்தில் நிறுத்துமாறு நிறுவனங்களின் தலைவர்கள் அறிவுறுத்தியதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன" என்றார்.


மேலும், “அரசு நிறுவனங்களிடம் இருந்து இந்த அதிகார சபைக்கு போதிய ஆதரவு இல்லை. பல வாகனங்கள் வேறு இடங்களில் பழுது பார்க்கப்படுகிறன. எதிர்காலத்தில் அனைத்து அரசு வாகனங்களும் இங்கு பழுது பார்க்கப்படுவதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.