அரசாங்க களஞ்சியசாலைகளில் ஒப்படைக்கப்படும் ஒரு கிலோ நெல்லுக்கு உத்தரவாதமான கொள்முதல் விலைக்கு கூடுதலாக இரண்டு ரூபாவை அரசாங்கம் வழங்குவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய மொரகட்டிய நெல் களஞ்சியசாலைக்கு சனிக்கிழமை (18) ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்ட அவர், இந்த வசதிகளுக்கு குறைந்தது 500 கிலோகிராம் நெல்லை பங்களிக்குமாறு விவசாயிகளை வலியுறுத்தினார்.
சேகரிக்கப்படும் நெல் அரிசியாக பதப்படுத்தப்பட்டு நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்கப்பட்டு, கட்டுப்படியாகக்கூடிய விலையை உறுதி செய்யும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
"அரிசி மாஃபியாவை முடிவுக்குக் கொண்டு வரவும், நியாயமான நடைமுறைகளை உறுதிப்படுத்தவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)