10 வீடுகள் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு மஹிந்தவுக்கு மக்கள் ஆதரவு உண்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 வீடுகள் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு மஹிந்தவுக்கு மக்கள் ஆதரவு உண்டு!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றத்தில் நேற்று இதை குறிப்பிட்டார். 


மேலும், மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வீட்டை மீளப்பெற்றெடுத்தால், அதை 44 இலட்ச ரூபாய்க்கு வாடகைக்கு விட முடியாது. 


விஜேராம பகுதியில் அவ்வளவு அதிக விலைக்கு யாரும் வீட்டை வாடகைக்கு எடுக்க மாட்டார்கள். 


அவ்வாறு செய்ய முடியும் என்றால், சீனர்களுக்குத்தான் அது சாத்தியமாகும். மஹிந்தவின் வீட்டை விடுவிக்க அவர் தயார் எனில், மக்கள் அவருக்கு 10 வீடுகளைக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் எனச் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். 


மேலும் மஹிந்த ராஜபக்ஷ தற்போது 80 வயதை அடைந்துள்ள நிலையில், அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டாலும், மக்களின் ஆதரவு அவருக்கு எப்போதும் கிடைக்கும். 


ஜனாதிபதி அநுர, மஹிந்தவுடன் மோதுவதைவிடுத்து, அவரின் மகன் நாமலுடன் மோதுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.