எனினும், வாக்களிக்கும்போது செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையை முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதேநேரம், சில சிரேஷ்ட அரசியல்வாதிகள் தமது வருமான ஆதாரங்களை வெளியிட விருப்பம் இல்லாத காரணத்தால், இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
எனவே, வாக்களிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.