ராகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவர் பாடசாலை சேர்க்கைக்காக 150,000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான மாணவர் ஒருவரை தரம் 01 இல் சேர்த்துக் கொள்வதற்காக, மத்துமகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அதிபர் இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாடசாலை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் பாடசாலை அதிபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.