கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!


அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அந்த தகவல் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடரும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.


குறித்த வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் வரை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.