அசெம்பிள் வாகனத்தை உடமையாக்கி பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்திற்கொண்ட நீதவான், விபத்துச் சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்ததுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.