கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் 17 வயதுடைய மகன் செலுத்திய நவீன ரக ஜீப், கம்பளை பஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவைக்கு அருகில் வைத்து முன்னால் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில், அதில் இருந்த மூன்று வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் இருந்து கம்பளை இல்லவத்துறைக்கு வந்திருந்த மொஹமட் சிராஸ் அம்மே என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
விபத்தை ஏற்படுத்திய ஜீப் தொடர்ந்து சுமார் 55 மீற்றர் தூரம் முன்னோக்கி சென்று கம்பளை தனியார் பஸ் நிலையத்திற்கு திரும்பும் போது அங்கிருந்த பழ வியாபாரி ஒருவர் மீதும் மோதியுள்ளதுடன் அருகில் இருந்த மற்றொரு முச்சக்கர வண்டியுடனும் மோதி நின்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.