இலங்கையின் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையிலான கடவுச்சீட்டு விநியோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையிலான கடவுச்சீட்டு விநியோகம்!


இலங்கையில் தற்போது மூன்று வகையான புதிய கடவுச்சீட்டுக்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


1. சாதாரண கடவுச்சீட்டுக்கள்  கருநீல நிறம் 

2. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள்  பழுப்பு சிவப்பு நிறம் (Maroon)

3. இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள்,  சிவப்பு நிறம்


கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன.


கடவுச் சீட்டானது இதுவரை இன அடிப்படையில் மத அடிப்படையில் பிரதிபலிக்காத,  ஒரு விஷேட அம்சம் இடம் பெற்றுள்ளது.


சகல மக்களின் உரிமையையும், மதத்தினையும், ஒற்றுமையையும் பேணும் வகையில் கடவுச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளது. 


அடுத்ததாக நாட்டின் அபிவிருத்தியையும். அழகையும், இயற்கை வளங்களையும் காட்சிப்படுத்தும் வண்ணம் அச்சிடப்பட்டுள்ளது அடுத்து குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை.


6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்.


8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்.


9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்.


10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்.


12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை.


14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம்


16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி.


18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம்.


20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை.


22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம்.


24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம்.


26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள்.


28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம்.


29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை.


30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள்.


31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை.


32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று.


34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு.


35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா.


36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு.

கொக்கிலாய் பறவைகள் சரணாலயம்.


37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம்.


38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம்.


40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல்.


42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை.


44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு.


45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை

என்பன அச்சிடப்பட்டுள்ளன.


-பேருவளை ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.