நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் இணைய தீர்மானித்துள்ளார்.
இன்று (21) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாகவும், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.