போதிய இலாபம் இல்லை! வரி செலுத்தாமல் இருப்பது எப்படி?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போதிய இலாபம் இல்லை! வரி செலுத்தாமல் இருப்பது எப்படி?


வருமான வரி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்த போதிலும், வர்த்தக நடவடிக்கைகளை நிறைவு செய்தல் அல்லது வருமான ஆதாரங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் வரி செலுத்த வருமானம் இல்லை என்றால், வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்புள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.


வரி செலுத்த போதுமான வருமானம் அல்லது இலாபம் இல்லை என்றால், அதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை 30.11.2024க்கு முன் நிகழ்நிலை ஊடாக திணைக்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.


அதன்படி, 01.04.2023 முதல் 31.03.2024 வரை அதாவது 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை அனுப்பும் வசதியை உள்நாட்டு இறைவரித் திணைக்கத்தின் இணையதளமான www.ird.gov.lk இல் காட்டப்பட்டுள்ள ஈ-சேவையை அணுகுவதன் மூலம் பெறலாம்.


இதேவேளை, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி செலுத்துவோரை பதிவு செய்வதற்காக 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட TIN இலக்கத்தின் கீழ் 2023/2024 ஆம் ஆண்டிற்கான வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 868,009 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.