பல முன்னாள் அமைச்சர்களுக்கு கொழும்பில் வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் பல நிறுவனங்களின் உடைமைகள் நிறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பொருட்களை மீண்டும் வழங்கும் வரை, இந்த பங்களாக்களை அரசால் ஏற்றுக்கொள்வது தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், பொருட்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் பலர் பல அரசாங்க நிறுவனங்களை வைத்திருப்பதால், அந்த ஒவ்வொரு நிறுவனங்களிலிருந்தும் நாற்காலிகள், மேஜைகள், தொலைக்காட்சிகள் போன்ற தளபாடங்களை அவர்கள் அரச பங்களாக்களுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் இதுவரை பத்து பங்களாக்கள் மட்டுமே கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.