ஜனாதிபதி அநுரவின் அடுத்த கட்ட அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி அநுரவின் அடுத்த கட்ட அதிரடி!


இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


வதியாதார் வெளிநாட்டு சேவையில் எந்தவித தகுதிகளும் அற்றவர்களும்,  அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஜனாதிபதித் தேர்தலின் போது இதற்கான வாக்குறுதியை அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் வழங்கி இருந்தார்.


இதற்கான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இப்பதவிக்காக இன, மத வசதி செல்வாக்கு, பேதமின்றி நாட்டின் வெளிநாட்டுச் சேவைக்காக தகுதியானவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.


கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.


இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது.


அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.


-பேருவளை ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.