இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில், இரத்தினபுரி மாவட்டத்தில் தான் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள திருமதி தமிதா அபேரத்ன, ஆனால் இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஒப்படைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுத் தேர்தல் வேட்புமனுவில் தனது பெயர் சேர்க்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த வேட்புமனுவில், முதலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கும்புர ஆராச்சிகே ஹேஷான் விஜய விதானகேவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேட்புமனுவை இரத்தினபுரி மாவட்ட தேர்தல் அதிகாரி வசந்த குணரத்னவிடம் கையளித்த பின்னர் இதன் பிரதியொன்று ஏனைய வேட்புமனுப் பட்டியல்களைப் போன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.