2023 (2024) க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீள் ஆய்வு பெறுபேறுகள், செவ்வாய்க்கிழமை (03) இரவு வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இல் ஊடாக பெறுபேறுகளை பார்வையிடமுடியும்.
பரீட்சை சுட்டெண் அல்லது தங்களின் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்தி பெறுபேறுகளை பார்வையிடமுடியும். .
தேவைப்படும் பட்சத்தில் 1911 என்ற ஹொட்லைன் எண் மூலம் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் விண்ணப்பதாரரை பரீட்சைத் திணைக்களம் கேட்டுக் கொண்டது.