புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.


அதன்படி, செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும்.


அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாவது வினாத்தாள் நடைபெறும்.


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,649 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.


பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால், இன்று (02) முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை ஒன்லைனில் திருத்தம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.


தொலைபேசி இலக்கங்கள் - 0112 784 208/ 278 4537 / 2784537 / 2786616 /2785413

அவசர இலக்கம் - 1911

தொலைநகல் - 0112 784422


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.