இலங்கையின் புதிய பிரதமர் நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் புதிய பிரதமர் நியமனம்!


இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று (24) பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

அதன் பின்னர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் கல்வி, தொழில், கைத்தொழில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் வரலாற்றில், மூன்றாவது பெண் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இணைந்துகொண்டார். 

இவர் இலங்கையின் 16ஆவது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.