தனது ஒரு வயது மற்றும் ஐந்து மாதங்களேயான மகளை மூக்கை அழுத்தி கொன்றதாக கூறப்படும் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி - கலஹா பகுதியைச் சேர்ந்த இருபத்தொரு வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கணவர் வீட்டிலிருந்து வெளியில் சென்றதன் பின்னர், சந்தேக நபரான அந்த பெண்ணும், அவரது மகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, சந்தேகநபர் அந்த தாய், கோபமடைந்து மகளின் மூக்கு மற்றும் வாயை இறுக்கமாக மூடியதால், மகள் உயிரிழந்துள்ளார் என்று பொலிசார் நடத்திய விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.