கிளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உட்பட 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களை கடுவெல நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (02) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.