தற்போதுள்ள குடிநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஜூலை 16ம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள், இரசாயன பொருட்கள், வட்டி செலவுகள் போன்றவற்றின் விலை குறைப்பை கருத்தில் கொண்டு இந்த குடிநீர் கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைவாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நீர் கட்டணத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, வீட்டு பாவனைக்கான குடி நீர் கட்டணத்தை 7 சதவீதத்தாலும், அரசு மருத்துவமனைகளுக்கான குடி நீர் கட்டணத்தை 4.5 சதவீதத்தாலும், பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கான குடி நீர் கட்டணத்தை 6.3 சதவீதத்தாலும் குறைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.