நாட்டைச சுற்றி சாதனை படைத்த சரித்திர நாயகன் சஹ்மி சஹீட்! சாதனைப் பயணத்தில் அமோக வெற்றி சன வெள்ளத்தில் மூழ்கியது பேருவளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டைச சுற்றி சாதனை படைத்த சரித்திர நாயகன் சஹ்மி சஹீட்! சாதனைப் பயணத்தில் அமோக வெற்றி சன வெள்ளத்தில் மூழ்கியது பேருவளை!

நடை பயணத்தின் முலம் நாட்டை சுற்றி வரும் சாதனை பயணத்தில் இன்று 26.08.2024 வெற்றி கண்டார்.

இலங்கை நாட்டில் எங்கும் செல்லலாம். நாட்டின் சகல இன மக்களும் சகோதரர்களே, எங்கும் பிரச்சினைகள் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தும் தலையங்கத்தில் இவரது பயணம் 13.07.2024 பேருவளையில் இருந்து தென்பகுதியூடாக ஆரம்பிக்கப்பட்டது. 

50 நாற்களில் நாட்டைச் சுற்றிவரும் இவரது முயற்சி இன்று 26.08.2024 45 நாாட்களில் 1520 Km நடை பயணம் முடிவடைந்தமை விஷேட அம்சமாகும். 

இலங்கை வரலாற்றில் நடை பயணத்தில் நாட்டைச் சுற்றி வந்த இரண்டாவது நபராகவும், குறைந்த வயதில் நாட்டைச் சுற்றும்  முதலாவது சாதனை வீரனாகவும் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

கடந்த 22. 04. 2004 ஆம்ஆண்டு "இயற்கையின் அழகை அழகுபடுத்த நாளைய சுவாசம்' எனும் தொனிப்பொருளில் இலங்கை பாதுகாப்பு படையின் 24 ஆவது கெமுனு சேவா படைப்பிரிவின் ஓய்வுபெற்ற இரானுவ உத்தியோகத்தர்  ஷெல்டன் பெரேரா 53 நாட்களில் இலங்கையை நடைபயணமாக சுற்றிவந்தார்.

அந்த வகையில் 53 நாற்களில் நாட்டைச் சுற்றி வந்த ஷெல்டன் பெரேராவின் சாதனையை 45 ஆவது நாள் பயணத்தின் முலம் சஹ்மி சஹீட் முறியடித்துள்ளார்.

அந்த வகையில் நடைபயணத்தில் நாட்டைச் சுற்றி வந்த இளம் வயதை உடைய முதலாம் வீரன் என்ற வகையில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்டார்.

இரவரது பயணத்தின் போது ஒவ்வொரு
இடங்களிலும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த போலீசார், இவருக்குத் தேவையான பாதுகாப்பினையும், இவரது உடல் ஆரோக்கியத்தையும் அவரிடம் சென்று கேட்டறிந்து, இவரது பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து தங்களது ஆதரவை வழங்கி வந்தனர். இடையிடையே இரகசிய போலீஸாரும் இவரிடம் சென்று நிலமைகளை  கேட்டறிந்து  முழுமையான ஆதரவை வழங்கி வந்தனர்.

மேலும் இவரது நடை பயணத்தின் போது ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் இவருக்கு பரிசுகளையும் வழங்கி கெளரவித்தனர்.

இவரது பயணத்தின் போது கிழக்கு மாகான முஸ்லிம் மக்கள், மற்றும் வடபகுதி, மன்னார், கிண்ணியா. ஹெரவப்பொத்தான போன்ற பகுதி மக்களின் வரவேற்பு அபரிமிதமானது.

விசேடமாக வட பகுதி தமிழ் உறவுகள், இன, மத, சாதி பேதமின்றி இவரை வட பகுதிக்கு வரவேற்று, பாடசாலைகளில் மாணவ மாணவியர் பதையின் இரு மருங்கிலும் நின்று கை தட்டி வரவேற்று, தங்களது ஒற்றுமையையும் ஆதவை வெளிப்படுத்தினர். 

மேலும் வடபகுதி தழிழ் மக்கள் தங்களது வழ்கை பாணியிலான உணவுகளை சமைத்து வழங்கி கெளரவித்தமை இவரது ஒற்றுமைக்கான
பயணத்தை பூரிப்படைச்செய்தன.

இன்று 26.08. 2024 ஆண்டு திங்கற் கிழமை இவரது இலட்சியப் பயணத்தின் நிறைவின் போது பேருவளை நகரம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மேடை அமைத்து, இவருக்கு வாழ்துதுத் தெரிவிக்க, நாட்டின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்கள் பேருவளையை நோக்கி படையெயடுத்து, பேருவளையில் சித்திர முக்கியத்துவம் வாய்ந்த சனத்திரள் , சன சமுத்திரம் ஒன்று கூடியது.  

பேருவளை நகரம் சமுத்திர வெள்ளத்தால் மூழ்கித் தத்தளித்தது. கொடை வள்ளல் நழீம் ஹாஜியார் அவர்களின் ஜனாஸாவுக்குப் பின் பேருவளை நகரி்ல் ஒன்று கூடிய மாபெரும் சன சமுத்திரம் இதுவாகும். 

இந்த மக்கள் வெள்ளம் பணத்திற்காவோ, அரசயலுக்காகவோ ஒன்று கூடிய கூட்டம் அல்ல. சாதனை வீரன் சஹ்மி அவர்களுக்கு வாழ்த்துக்கூற திறன்ட மக்கள் வெள்ளமாகும்.

இவரது வாழ்க்கை வட்டத்தில் இவ்வாறான சாதனைகள் பல புறிந்து, நாட்டுக்கு நற்பெயரும், புகழும் சேர்க்க எமது வாழ்த்துக்கள்.

வாழ்க சஹ்மி
வளர்க Show me the view

-பேருவளை ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.